நெமிலியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட இருவரை கைது செய்து ரூ 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .வருகின்ற 18_ ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் நெமிலி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு நெமிலி பகுதியில் உள்ள அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மக்களுக்கு பணம் வினியோகிப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் நெமிலியை அருகில் உள்ள மூலப்பட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெமிலி முன்னாள் பேரூராட்சி தலைவர் வினோபா மற்றும் பொன்னை கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் ரமேஷ் ஆகிய 2 பேரும் வாக்காளர்களின் வீட்டுக்கு சென்று பணம் கொடுத்து வந்துள்ளனர். அதிகாரிகள் அவ்விருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவ்விருவரும் கைதுசெய்தனர்.