Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரூ.248 கோடி மதிப்பிலான 21 திட்டங்கள் துவக்கம் …!!

காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதிய தடுப்பணை உட்பட 248 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், வளைய சிப்ரா, கிராமத்தில் உள்ளாவூர் அருகே பாலாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்படுகிறது. ஏற்கனவே வெங்கச்சேரி, தேவனூர், வல்லிபுரம், உள்ளிட்ட ஐந்து தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆறாவது தடுப்பணைக்கு இன்று 42 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படுகிறது.

இதேபோல கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கண்டரக்கோட்டை கிராமத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் 17 மாவட்டங்களில் 247 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிலுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்.

Categories

Tech |