முதல்வர் பொது நிவாரண நிதிக்காக வசந்த் அன்கோ சார்பில் ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து பல பிரபலங்களும் நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதைதொடர்ந்து கொரோனா மீட்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசந்த் அண்ட் கோ சார்பில் ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது வசந்தன்கோ நிர்வாக இயக்குனர்கள் வினோத்குமார், தங்கமலர், ஜெகன்நாத் ஆகியோர் அருகில் இருந்தனர்.