Categories
மாநில செய்திகள்

ரூ.2,500… பொங்கல் பரிசு கிடைக்கவில்லையா…? உடனே இத பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு..!!

பொங்கல் பரிசு விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்கான பணிகளை அனைத்து கட்சியினரும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். பொது மக்களை கவர்வதற்காக தேர்தல் அறிக்கைகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் அரசு சார்பில் 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இரண்டரை மடங்கு உயர்த்தி வழங்குவது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலை ஒட்டி சுயநல அறிவிப்போடு இதனை வெளியிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி வீடு வீடாக சென்று செயல்படுத்தப்பட்டது. வரும் 4ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாள்தோறும் 200 பேர் வீதம் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த தேதிகளில் வாங்காதவர்கள் 13ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, தலா 200 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் முழு கரும்பு ஆகியவை அடங்கும். இதற்கிடையில் ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் சம்பள உயர்வு பிரச்சனையை முன்னிறுத்தி போர்க்கொடி நடத்தி வந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்க தேவையான நிதி அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. பரிசு தொகுப்பு தொடர்பாக ஏதாவது புகார் இருந்தால் 044-2766240 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அறையை அணுகவும் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |