Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ25,00,000….. போலி மதுபாட்டில்களுக்கு வீட்டோடு சீல்….. 2 பேர் கைது….. புதுச்சேரி போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர்.

புதுச்சேரி யூனியன்  காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த அறையில் போலி மதுபானம் தயாரிக்கும் இயந்திரங்கள் புரோகிராம்கள் ஸ்டிக்கர்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இது  தொடர்பாக 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |