சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னையில் கடற்கரையோரம் கடை அமைத்து தருவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடற்கரையோரம் இருக்கும் அனைத்து கடைகளுக்கும் யூனிபார்ம் கார்டு கொடுக்கப்படும், அதற்கு அரசாங்கம் முதற்கட்டமாக 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த வாரத்திலிருந்து கடைகள் அமைப்பதற்கான பொருட்கள் வாங்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் அனைத்து கடைகளும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் மாத மாதம் ஒரு சிறு தொகையை வாடகையாக அவர்கள் கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்தார். அதே போல் லூப் சாலையை பொருத்தவரை ஒரு பிளாட்பார்ம் போன்று கடை அமைக்கப்பட்டு அதில் சுகாதாரமான முறையில் உணவுப் பொருள் விற்க அறிவுறுத்தப்பட்டு அவர்களுக்கு கடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்த ஒரு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.