Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குடிநீர்ப் பிரச்சனைக்கு ரூ 29 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு – சந்தோஷ் கே.மிஸ்ரா..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  குடிநீர்ப் பிரச்சனையை சமாளிக்க சுமார் 29 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,  சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால்  தேவேரியம்பாக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையரும், காஞ்சிபுரம் மாவட்ட குடிநீர் திட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சந்தோஷ் மிஸ்ரா, மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Image result for குடிநீர்

ஆய்வு செய்த பின்னர் சந்தோஷ் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆழ்துளை கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட 482 குடிநீர் திட்டப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க, சுமார் 29 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |