Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு; 12 மாதங்களுக்கு பின் கடனை செலுத்தலாம் – நிர்மலா சீதாராமன்!

சிறு,குறு தொழில்களுக்கு வழங்கும் கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,

கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடனுக்கான உத்தரவாதத்தை வங்கி நிதி நிறுவனங்களுக்கு அரசு வழங்கும். அதேபோல சிறு,குறு நிறுவனங்கள் தொழிலை விரிவுபடுத்த ரூ.10,000 கோடி கடன் வழங்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.52000 கோடி செலுத்தப்பட்டுள்ளது, நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு தானியம் விநியோகப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு பொருளாதாரம் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவோம் என தெரிவித்த அவர் 52,606 கோடி ரூபாய் 41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |