உத்திரப்பிரதேச அரசின் பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவாக ஐந்தரை லட்சம் கோடி ரூபாயில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கலானது . சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் சாலை வசதிகள் 300 கோடி ரூபாயும். அயோத்தி மற்றும் வாரணாசியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, அழகுபடுத்துவதற்காக 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.