தமிழகத்தில் இதுவரை 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் .மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதி அமுலில் இருப்பதால் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது . மேலும் முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவிக்கையில் , தேர்தல் நடத்தை விதி அமுலில் இருப்பதை கருத்தில் கொண்டு இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சுமார் 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பணமாகவும் , 209 கிலோ தங்கம் , 317 கிலோ வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.