Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.3,737,00,00,000 ஒதுக்கீடு…. 30,67,000பேர் பயன்….மத்திய அரசு அதிரடி அறிவிப்பு …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு இந்த போனஸ் காரணமாக கூடுதலாக 3,737 கோடி ரூபாய் செலவு ஆகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சொல்லி இருப்பது என்னவென்றால், 3737 கோடி ரூபாய் பண்டிகை கால போனசாக அளிக்கப்படும் நிலையில் அரசு ஊழியர்கள் கூடுதலாக இந்த சமயத்தில் பொருட்களை வாங்குவார்கள். பொருளாதாரம் சரிந்து இருக்கும் நிலையிலேயே பொருட்களுக்கு கூடுதலாக தேவை ஏற்படும். ஆகவே வியாபாரம் மேம்படும், இந்த முயற்சி காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் வியாபாரிகளுக்கும் பலன் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

Categories

Tech |