Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ 4.5 கோடி” டெண்டரில் விதிமீறல்… இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி..!!

சென்னையில் 4.5 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பாக 45 டெண்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நான்காவது மற்றும் ஆறாவது மண்டலம் தண்டையார்பேட்டை அயனாவரம் பகுதிகளில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் அதன் பராமரிப்பு உள்ளிட்ட 45 வீதமான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை பெற மாநகராட்சி புதிய நடைமுறையை கொண்டு வந்ததால் டெண்டருக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த மகாதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Image result for chennai high court

அந்த மனுவில் புதிய நடைமுறை காண தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படாமல் வேண்டியவர்கள் ஒத்திகை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் நடத்தப்பட இருக்கும் டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டரை அறிவிக்கும் வரை இடைக்கால தடையை உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவேந்திரன் வியாழன் மற்றும் வெள்ளி நடைபெறவிருந்த டெண்டர் அளிக்கும் நிகழ்விற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

Categories

Tech |