Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து ஜூன் 4-வரை ரூ.4,333 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்வர்!!

தமிழக அரசு கொரோனா தொற்றினை பேரிடராக அறிவித்து ஜூன் 4ம் தேதி வரை ரூ.4,333 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜனவரி முதல் முனைப்புடன் செயல்பட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக 72 மையங்கள் மூலம் தினமும் சராசரியாக 13,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சிரமங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் தடுக்கப்பட்டது. மேலும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஊரடங்கு காலத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழநாட்டில் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரக்கூடிய நபர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ள சூள்நிலையில் அதனை மீட்டெடுக்கவும், மறுகட்டமைப்பு செய்யவும் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தி ஊரக வலை வாய்ப்பு திட்டத்தில் இதுவரை நிவாரணமாக 123 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு நிதியாக இதுவரை ரூ.300 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிககுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 33,000 தூய்மை பணியாளர்களுக்கு மதிப்பு ஊதியமாக ரூ.2,500 வழங்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் மூலம் தினமும் 8 லட்சம் மக்களுக்கு சூடான, சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது உள்பட பல்வறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |