நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளிக்கு வெளியான பிகில் படம் வருமானம் தொடர்பான கணக்கை தவறாக கட்டியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு சொந்தமான AGS பட தயாரிப்பு நிறுவனம் , பைனான்சியர் அன்புசெழியன் , நடிகர் விஜய் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இதற்காக மாஸ்டர் படப்பிப்பில் இருந்த நடிகர் விஜயை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். தமிழக சினிமாவிலும் , அரசியலிலும் இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த சோதனை முடிவில் அன்புச்செழியன் சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில்77 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 1.5 கிலோ தங்கம் , ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் , அன்புச்செல்வன் ஆகியோருக்கு சம்மன் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் நேரடியாக விசாரணைக்கு ஆஜராகினார்கள். இந்த நிலையில் கிடைக்கப்பட்ட ஆவணங்களை வைத்து சென்னை பனையூரில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த ஆய்வில் 8 அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆய்வு தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் நடிகர் விஜய் முறையாக கணக்கு காட்டி வரி செலுத்தியுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிகில் படத்திற்கு 50 கோடியும் , மாஸ்டர் படத்திற்கு 80 கோடியும் சம்பளமாக பெற்ற்றுள்ளார் என்று தெரிவித்த நடிகர் விஜய் 2 படத்திற்கும் முறையாக வரி செலுத்தியுள்ளார் என்று தெரிவித்தனர்.