Categories
தேசிய செய்திகள்

ரூ.500 கோடியில் ஆப்பரேஷன் பசுமை திட்டம், தேனீ வளர்ப்பவர்களுக்கு உதவ ரூ.500 கோடி ஒதுக்கீடு!!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். குளிர்சாதனம் உள்ளிட்ட கிடங்குகளில் விவசாய பொருட்கள் சேமிக்க 50% மானியம் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, விவசாயிகள் மற்றும் தேனீ வளர்பவர்களுக்காக 2 திட்டங்களை அறிவித்துள்ளார். அவை என்னவென்றால், “சுமார் 2 லட்சம் தேனீ வளர்ப்பவர்களுக்கு உதவ 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனீ வளர்ப்பின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆப்பரேஷன் பசுமை திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆப்பரேஷன் பசுமை திட்டம் என்பது அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விநியோக சங்கிலியை உருவாக்குவது என தெரிவித்துள்ளார். மேலும் தக்காளி, வெங்காயம், உருளை விவசாயிகளுக்கான வசதிகள் அனைத்து காய்கறி, பழங்கள் பயிரிடுவோருக்கு விரிவுபடுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |