Categories
மாநில செய்திகள்

சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி மதிப்பில் நவீன தரவு மையம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

செங்கல்பட்டு சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் நவீன தரவு மையத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் ரூ.500 கோடியில் நவீன தரவு மையம் கட்டப்படவுள்ளது. இந்த நவீன தரவு மையம் ( Smart Data Centre) வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள துணைபுரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. தற்போது சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் நவீன தரவு மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கி சங்கங்கள் ஆகியவற்றின் வழிகாட்டுதல் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சில்லறை பரிவர்த்தனை முதல் வங்கிகளுக்கு இடையேயான பணத் தீர்வுகள் வரை அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள உள்ளது.

இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 400 கோடி பரிவர்த்தனையை கையாளுகிறது. இவற்றின் பொருளாதார மதிப்பு மதத்திற்கு சுமார் ரூ.15,000 கோடி ஆகும். எனவே இந்த நிறுவனத்தின் மூலம் சர்வதேச அளவில் 8 அடுக்கு பாதுகாப்பு உட்கப்பமைப்பு வசதிகளுடன் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது.

சென்னை மாநகரத்தில் 4 அடுக்கு தரத்துடன் முதல் தரவு மையமாக இது அமைக்கப்படவுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற நோக்கத்தை செய்லபடுத்துகின்ற அனைத்து விதமான டிஜிட்டல் முயற்சிகளுக்கும் இந்த தரவு மையம் உதவி புரிய உள்ளது. தேபோல சுற்றுப்புற தூய்மையை பாதிக்காத வண்ணம் பசுமை கட்டிட வரைமுறைகளின் படி, இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.

Categories

Tech |