Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“இரயில் நிலைய பராமரிப்பு” குப்பையை கொட்டினால் ரூ 5,000 அபராதம்…ரெயில்வே நிர்வாகம் அதிரடி …!!

ரயில் நிலையத்தில் யாரும் குப்பையை கொட்டினால் 5000 அபராதம் விதிக்கப்படுமென்று  ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் பராமரிப்பின்மை குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து நாடுமுழுவதும் உள்ள  ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு , ரெயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர், தூய்மை மற்றும் எரிபொருள் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு அமைத்ததோடு இந்தியா முழுவதும்  உள்ள சுமார் 720 ரெயில் நிலைய வளாகத்திலோ அல்லது தண்டவாளத்தில் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் முதல்கட்டமாக M.G.R சென்டிரல் ரெயில் நிலையம் உள்பட 19 முக்கியமான இரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக  தெற்கு ரெயில்வேயில் உள்ள ஒவ்வொரு ரெயில் நிலையத்திற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல  சென்னை புறநகர் ரெயில் நிலையங்களான தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், காட்பாடி, பெரம்பூர், ஜோலார்பேட்டை, மாம்பலம், கூடுவாஞ்சேரி, பெருங்குளத்தூர், திருத்தணி, சிங்கம்பெருமாள் கோவில், சென்னை கடற்கரை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் இதற்கான நடவடிக்கையை தெற்கு இரயிவே திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |