மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உதவி செய்யும் வகையில் கடன் வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். நாட்டின் பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையின் பொருளாதார தேவையும் வருமானமின்றி உள்ளது. இந்நிலையில்தான் நாட்டில் இயங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
தற்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. Franklin Templeton நிறுவனம் 6 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை முடக்கியதால் ரிசர்வ் வங்கி உதவி செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி கடன் உதவி செய்ய அறிவித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்ப்பி தெரிவித்துள்ளார்.