15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் நிறுத்து ரூ.1928.56 தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கோடி 2020-21ம் ஆண்டிற்கான மத்திய அரசிடமிருந்து, மத்திய வரி வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கக்கூடிய மொத்த பங்குத்தொகையான ரூ.32,849 கோடியிலிருந்து முதல் தவணையாகும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்காட்டுள்ளது.
2020-21ம் ஆண்டிலேயே மீதமுள்ள தொகை இன்னும் 13 தவணைகளில் பெறப்படும் என துணை முதல்வர் விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், 15வது நிதிக்குழு தன்னுடைய பரிந்துரைகளில், மக்கள்தொகை, பரப்பளவு, வருமான இடைவெளி போன்ற தமிழ்நாட்டிற்கு வலு சேர்க்காத காரணிகளுக்கு அதிக மதிப்பீடுகள் வழங்குவது காரணமாக, நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று வலியுறுத்தி, 15வது நிதிக்குழுவிற்கு ஒரு கோரிக்கை மனுவினை அரசு தயார் செய்து வருகிறது.
தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை 15வது நிதிக்குழுவிடம் சரியாக எடுத்துரைத்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை அரசு தொடர்ந்து நிலை நிறுத்தும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று விக்கலாம் அழைத்திருந்தார். இந்த நிலையில் 2வது தவணையாக மத்திய அரசிடம் இருந்து ரூ. 295.25 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.