இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதியை உட்படுத்தி ரூ 539 கோடியே 992 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த சோதனைகளில் பிடிபட்டது குறித்து மார்ச் 25_ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . அதில் மாநில வாரியான புள்ளிவிவரத்தில் தமிழகத்தில்தான் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் அதிக அளவில் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தல் ஆணையம் வெளியீடுள்ள புள்ளிவிவரங்களின்படி பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் :
தமிழகத்தில் 107 கோடியே 24 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
உத்தரப் பிரதேசத்தில் 104 கோடியே 53 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணம் இல்லாத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .
103 கோடி ரூபாய் மதிப்புடன் ஆந்திரா 3வது இடத்திலும் ,
92 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் பஞ்சாப் நான்காவது இடத்திலும் இருக்கின்றது .
கர்நாடகத்தில் 26 கோடியே 53 லட்சம் ரூபாயும் ,
மகாராஷ்டிராவில் 19 கோடியே 11 லட்சம் ரூபாயும் ,
தெலுங்கானாவில் 8 கோடியே 20 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
இது வரையில் ஒட்டுமொத்த மொத்தத்தில் மார்ச் 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 25-ஆம் தேதி வரை 143 கோடியே 37 லட்சம் ரூபாய் ரொக்கமும் , 89 கோடியே 64 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பானங்களும் , 121 கோடியே 71 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களும் , 162 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன . மேலும் 12 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்களும் என 539 கோடியே 992 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .