Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ.54,00,000…. “வெளிநாட்டு பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு”…. பணத்தை இழந்த ஐ.டி பெண்…!!

புதுச்சேரியை சேர்ந்த ஐ.டி பெண் ஊழியர் அறிமுகமில்லாத நபர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை தருவதாக நம்பி 54 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த சுனைனா என்ற மென்பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் நண்பர் ஆகியுள்ளார். வெளிநாட்டில் உரிய வேலையில் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். அந்த பெண்ணும் அவர் கூறுவதை உண்மை என்று நம்பி வந்துள்ளார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை அனுப்பி இருப்பதாக அவர் கூறினார். அதை தொடர்ந்து சில நாட்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பொருள்கள் வந்துள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள 54 இலட்சம் வரி கட்ட வேண்டும் என்று ஒருவர் பேசியுள்ளார்.

அதை நம்பிய அந்த பெண் பல தவணையாக 54 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். பல நாட்கள் ஆகியும் எந்த பொருளும் வரவில்லை. வாட்ஸ் அப்பில் அறிமுகமான நண்பருக்கும், அதன்பிறகு சுங்க அதிகாரியாகப் பேசிய அந்த நபருக்கும் அழைத்துள்ளார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. பின்னர் நாம் பணத்தை ஏமாந்து இருக்கிறோம் என்று உணர்ந்த அந்த பெண் புதுச்சேரி சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் நேற்று முன்தினம் புகார் அளித்தா.ர் இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. எவ்வளவு செய்திகள் வந்தாலும் படித்தவர்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளத் தவறுகின்றனர்.

Categories

Tech |