Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ 62,000 சம்பளம் …… மத்திய அரசு வேலை… கடைசி நாள் : டிசம்பர் 31 ….!!

மத்திய அரசிற்கு உட்பட்ட கட்டுமான நிதிக்கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 உதவி மேலாளர் பணியிடங்கள்  நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி : உதவி மேலாளர் (Grade -A)

காலிப் பணியிடங்கள் : 08

தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, இரண்டு ஆண்டு பிஜிடிபிஎம் அல்லது சிஏ, பி.டெக், எல்எல்பி போன்ற துறைகள் படித்து குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.28,150 முதல் ரூ.64,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifcl.co.in/ என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலி அனுப்ப வேண்டும்.

கட்டணம் : ரூ.500. இதனை டில்லியில் மாற்றத்தக்க வகையில், India Infrastructure Finance Company Limited என்னும் பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 31.12.2019

மேலும் விபரங்களை அறிய

http://www.iifcl.co.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Categories

Tech |