Categories
தேசிய செய்திகள்

ரூ. 65,000,00,00,000 ஏழைகளுக்கு தேவை….! பாஜகவுக்கு புது நெருக்கடி ….!!

ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவை படுகின்ற நிலையில் பாஜக பெருமுதலாளி கடனை நிறுத்தி வைத்துள்ளது விமர்சனமாகியுள்ளது.

 

சுமார் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில்  கொரோனாவின் தாக்கத்தால் ஊரடங்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்தைக் கடந்து  இருக்கும் நிலையில் ஏழை, எளியவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார வல்லுநருமான ரகுராம் ராஜனுடன் இன்று  வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடினார்.

இருவருக்கும் இடையிலான  உரையாடலின் போது, பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன் கூறுகையில்;  ‘இந்தியாவில் முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ 65 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் ’ எனவும் மேலும்  ‘முழு முடக்கத்தை நீக்கும் சமயத்தில்  புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். மேலும் ஊரடங்கைத் தளர்த்தும் நடவடிக்கைகளில் நாம் அளந்து படிகளை வைக்க வேண்டும்” என்று  கூறினார்.

கரோனா வைரஸால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, தீர்வுகள் பற்றி பல்வேறு நிபுணர்களுடன் உரையாட ராகுல் காந்தி திட்டமிட்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக ரகுராம் ராஜனுடன் உரையாடியிருக்கிறார்.  ராகுல் காந்தி நடத்திய இந்த உரையாடல் மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. மேலும் ராகுல் காந்தி அடுத்தடுத்து பல நிபுணர்களுடன் பொருளாதார நிபுணர்களுடன் திறந்த உரையாடல்களை நடத்த இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஊரடங்கு நேரத்தில் ஏழைகளுக்கு உதவத்  65 ஆயிரம் கோடி ரூபாய் தேவை படுகின்ற நிலையில் தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு 68 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ரைட் ஆஃப் எனப்படும் தள்ளி வைத்துள்ளது பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை கிளப்பி, விவாதப்பொருளாக மாற்றியுள்ளது.

Categories

Tech |