Categories
அரசியல்

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ 73,00,000 …. அதிரடி படையினர் பறிமுதல்….!!

சிவகாசியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கூறி 73 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உரிய ஆவணம் இல்லாமலால் கொண்டு செல்லும் பணத்தை கைபற்றிவருகின்றனர்.

Image result for பணம்

அந்த வகையில் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் காவல்துறையினர் வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதையடுத்து சிவகாசி பேருந்து நிலையம் பறக்கும் படை அதிகாரிகளுடன் காவலர்கள் வாகன சோதனை நடத்திய போது ரூ.73 லட்சம்  உரிய ஆவணமின்றி தனியார் வங்கி ஏடிஎம்மில் நிரப்ப எடுத்து பணத்தை தேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |