Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரூ. 75 இலட்சம் போதாது…! ரூ. 1 கோடி கேட்டு C.Mக்கு கடிதம்…. நடிகர் பார்த்திபன் தகவல் …!!

திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு…  அந்த பணம் திரும்பி வந்ததாக வரலை என்கிறது பற்றி எனக்கு கவலையே கிடையாது. நான் பண்ண படம் மக்கள்கிட்ட போய் ரொம்ப பெருசா ரிச் ஆகி  இருக்குது. உலகம் பூரா இந்த படம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த உலகப் பட விழாவில் என்னுடைய படம் திரையிடறாங்க அப்படிங்கறது மிக மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம்.

இந்த நேரத்தில் 20 வருஷமா இந்த நிகழ்சியை நடத்திட்டு இருக்கின்ற தங்கராஜ் அவர்களுக்கு என்னுடைய பாராட்டு. அதே மாதிரி தமிழக அரசுக்கும்,  தமிழக முதல்வருக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோள். இந்த 75 லட்சம் வைத்துக் கொண்டு இந்த மாதிரி ஒரு பிலிம் பெஸ்டிவல் நடத்த முடியாது. இவ்வளவு கிராண்டா நடத்த முடியாது. அதனால நானும் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.

இதன் வாயிலாக நான் சொல்வது…  அடுத்த வருஷம் அட்லீஸ்ட் ஒரு கோடி ரூபாயாக மாறனும். அப்போ பல கோடி பேரோட வாழ்ந்து உங்களுக்கு இருக்கும் என்பதை நான் தெரிவிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் ஆசைப்படுறேன். நம்முடைய தமிழ் சினிமாவின் உடைய கரு உலகம் பூரா பேசப்படற ஒரு விஷயம். நிறைய ஜாக்கி ஜான் படங்களில் கூட பாத்தீங்கன்னா…  நம்ம படத்தினுடைய கருவை அவங்க எடுத்து பயன்படுத்தி இருக்காங்கன்னு நிறைய பேர் சொல்லுவாங்க.

அதனால நம்மளுடைய சிந்தனை அமிதாபச்சன் வந்து…  படம் பண்ணும் போது அவர் நாத்துல சொல்லுவாரு,  நம்முடைய தமிழர்களுடைய அறிவு – திறன் இந்த கன்டென்ட் கண்டிப்பா வடக்கில் இல்லை என்று சொல்லுவாரு.  அந்த அளவுக்கு நம்முடைய தமிழர்களின் உடைய படங்களுடைய பெருமை –  தரம் எல்லாமே ரொம்ப உயர்ந்தது. அது மாதிரி இது இன்னும் உலக லெவலுக்கு போறதுக்கு இரவின் நிழல் மாதிரியான படங்களின் முயற்சி…. அப்புறம் இதில் பங்கு பெறுகின்ற அந்த 12 படங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |