முப்படைகள் மற்றும் கடலோர காவல் படைக்கு ரூபாய்.84,328 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இலகுரக டாங்கிகள், கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கும் குண்டுகள், காலாட்படை போர் வாகனங்கள் உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும் என தெரிய வந்திருக்கிறது. சீன எல்லையில் சீனபடைகளுடன் மோதல் நடந்த நிலையில், இப்பொருட்கள் வாங்கப்படுகிறது.