கனடாவில் பணியாற்றி வரும் இந்தியர் கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்துள்ளார்.
கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் கல்வித்துறை கீழ் பணியாற்றி வந்தவர் சஞ்சய் மதன். ஆண்டுக்கு $176,608 ஊதியமாக வாங்கும் இவரது சொத்து 22 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. இவரது மனைவி ஷாலினி, மகன்கள் சின்மயா மற்றும் உஜ்ஜாவால் ஆகியோர் விதான் சிங் என்பவருடன் இணைந்து பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியிலிருந்து 11.6 மில்லியன் டாலர் முறைகேடு செய்துள்ளனர். இவர்களின் முறைகேடு தெரிய வந்தவுடன் இந்த தொகை மாகாண கருவூலத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
ஆனால் இந்த முறைகேடு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று ஷாலினியும் அவரது இரண்டு மகள்களும் தெரிவித்து சத்திய பிரமாணத்தின் முறையிட்டனர். இது குறித்து சஞ்சய் மதன் தெரிவித்ததாவது, இந்தியாவில் தனக்கு 5 வங்கி கணக்குகள் இருக்கிறது. அதில்$12,365,719 சேமித்து வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டார். அவரது கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஒன்றிய மாகாண நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்று அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது. முறைகேடு செய்த 11.6 மில்லியன் டாலரின் இந்திய மதிப்பு 84,73,57,960 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.