Categories
அரசியல்

ரூ8,830 கோடி முதலீடு… வெற்றி கண்ட முதல்வர்… ராமதாஸ் பாராட்டு…!!

மூன்று நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்ட முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for ramadoss pmk

முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த ஆதரவு கட்சிகள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில்,மூன்று நாடுகளில் பயணம் மேற்கொண்டதில் தமிழ்நாட்டுக்கு 8,830 கோடி முதலீடு வந்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கணிசமான எண்ணிக்கையில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலீடு திரட்டப்பட உள்ளது வரவேற்க தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |