Categories
தேசிய செய்திகள்

“ரூ. 94,202, கோடி”… விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் மூலம்… மத்திய அரசு அதிரடி..!!

நடப்பு ஆண்டு காரிஃப் பருவத்தில் சுமார் 64.07 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.94,202 கோடி கிடைத்துள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பாக உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனவரி 2ஆம் தேதி வரையில் மொத்தம் 498.95 லட்சம் மெட்ரிக் டன் அளவு
கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே கால அளவை விட 24.49 சதவீதம் அதிகமாகும்.

இந்த காரிஃப் சந்தைப் பருவத்தில் சுமார் 64.07 லட்சம் நெல் விவசாயிகள் ரூ.94,202.64 கோடியை குறைந்தபட்ச ஆதரவு விலையாகப் பெற்றுள்ளனர். 51.66 லட்சம் மெட்ரிக் டன் அளவு பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் அளவு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி வரையில் 1,40,924 விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு 2,61,623 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை கொள்முதல் செய்துள்ளது. இதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1,399.84 கோடி கிடைத்துள்ளது. 75,78,832 பருத்தி கட்டுகள் 14,81,064 பருத்தி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு ரூ.22,208.01 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |