சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் பணி தொடக்கி நடைபெற்று வருகின்றது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருநகர சென்னை காவல் துறைக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 22ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 100 ரூபாய் வழங்கப்படும் என்றும்,
78 சதவீத மக்கள் ஏற்கனவே ரேஷனில் பொருட்கள் வாங்கி விட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு 26-ஆம் தேதிக்கு பிறகு பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் பணி இன்று காலை 8:30 மணிக்கு இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு தெருக்களுக்கும் வீடு வீடாகச் சென்று ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றார்கள்.