கொரோனா பாதிப்புக்குள்ளான மாநகராட்சி பணியாளர் 34 பேருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பரவி வரும் கொரோனா தொற்றால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்ப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருகின்றனர். இதில் சுகாதாரத் துறை ஊழியர்களுடன் இணைந்து மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொள்ளும் பணி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கடுமையான பணியை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அந்த பகுதியில் இருக்க கூடியவர்களுக்கு தூய்மைப் பணியை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் மிகப்பெரிய போராட்ட களத்தில் தூய்மை பணியாளர்களும் களமிறங்கி செயல்படுகின்றனர். சென்னை மாநகராட்சி பகுதியில் பணியில் ஈடுபட்ட 34தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு கருணைத் தொகை ரூ 2 லட்சம் வழங்கப்படும் என எஸ் பி வேலுமணி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி கொரோனா பாதிக்கப்பட்ட 34 பேருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகின்றது.
#COVID19 நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு, தொற்று பாதிப்புக்குள்ளான 34 @chennaicorp பணியாளர்களுக்கு கருணை தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.#TNCoronaWarriors #UllaatchiWarriors #TN_Together_AgainstCorona
— SP Velumani (@SPVelumanicbe) May 15, 2020