தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணிகள் :
துணை ஆசிரியர் பணி – 18
துணை காவல் கண்காணிப்பாளர் – 19
வணிக வரி உதவி ஆணையர் – 10
கூட்டுறவு சங்க துணை பதிவாளர் – 14
அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் ரூரல் டெவெலப்மெண்ட் – 07
தீயணைப்பு மீட்புதுறை மாவட்ட அதிகாரி – 01
மொத்தம் – 69 காலி பணியிடங்கள்
முக்கிய தேதிகள் :
இத்தேர்வுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.02.2020
முதல் நிலை தேர்வு நடைபெறும் தேதி : 05.04.2010, காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை.
முதன்மை தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஊதியம் :
குறைந்தபட்சமாக ரூ 56, 100 முதல் அதிகபட்சமாக ரூ. 1,77 ,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு கட்டணம் :
நிரந்தரப் பதிவில் பதிவு செய்யாத விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 150
முதல் நிலை தேர்வு கட்டணம் ரூபாய் 100
முதன்மை தேர்வுக்கான கட்டணம் ரூபாய் 200
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் , மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
குறிப்பு : ஆன்லைனில் மட்டுமே தேர்வு கட்டணத்தை செலுத்த முடியும்.
வயது வரம்பு :
(01.07.2020 அன்றுக்குள் ) உதவியாளர் ஆணையர் தவிர மற்ற
பணிகளுக்கான வயது : 21 முதல் 52 வரை
உதவியாளர் ஆணையர் பணிக்கான வயது : 21 முதல் 32 அல்லது 33 வரை
குறிப்பு : எஸ்.சி /எஸ்.டி /பி.சி /எம்.பி.சி பிரிவினர் / விதவைகள் – வயது வரம்பில் தளர்வு உண்டு .
கல்வித்தகுதி :
குறைந்தபட்சமாக , அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் , ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பிலும், அதிகபட்சமாக முதுகலை பட்டப்படிப்பிலும் தேர்ச்சி அவசியம்
குறிப்பு : பணிகளுக்கேற்ப கல்வித் தகுதியில் மாற்றங்கள் உண்டு.
விண்ணப்பிக்கும்முறை :
டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
உடல்தகுதி : துணை காவல் கண்காணிப்பாளர் , தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அதிகாரி போன்ற பணிகளுக்கு உடற்தகுதி அவசியம்.