80,000 கோடி ரூபாய் இருந்தால் தான் கொரோனா தடுப்பூசியை கொடுப்பதற்கு அடுத்த ஓராண்டிற்கு கொடுக்கமுடியும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
யார் இந்தத் தகவலைச் சொன்னார்கள் ?
சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா ட்விட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்த ஓராண்டுக்கு கொரோனா தடுப்பு மருந்தை வேற நிறுவனத்திடம் வாங்கி, தடுப்பூசி உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றால் 80 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவில் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த அளவிற்கான நிதி நம்மிடம் இருக்கிறதா ? நாம் என்ன தயார்படுத்திக் கொள்ள போகிறோம் ? என Quick question என்று ஒரு கேள்வியை கேட்டுள்ளார். தற்போது இவரின் இந்த கேள்வி பேசு பொருளாக மாறியுள்ளது.
Quick question; will the government of India have 80,000 crores available, over the next one year? Because that's what @MoHFW_INDIA needs, to buy and distribute the vaccine to everyone in India. This is the next concerning challenge we need to tackle. @PMOIndia
— Adar Poonawalla (@adarpoonawalla) September 26, 2020
சீரம் நிறுவனம்:
உலகிலேயே பெரிய அளவிலான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தான் இருக்கிறது. இங்கு உற்பத்தி கூடிய தடுப்பூசிகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பெரிய பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள சீரம் நிறுவனதிடம்,பல நாடுகள்கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து நாங்கள் உங்களிடம் தருவோம்… நீங்கள் தடுப்பூசி தயார் செய்து தரும்படி தற்போதே ஒப்பந்தம் போட்டு வைத்துள்ளது. இதற்கான மூலப்பொருட்களையும் சீரம் நிறுவனம் தற்போது தயார் செய்து வருகின்றது.
சீரம் நிறுவனத்தின் தொடர்பு:
சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் முன்னணி வரிசையில் இருக்கும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தோடு தொடர்பில் இருக்கின்றது. பிரிட்டன் ஆஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கோவிசீல்ட் தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டது. கோவிட்சீல்ட் நல்ல பலனை கொடுத்தால் இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும்.
கோவிட்சீல்ட் முக்கியத்துவம்:
கோவிட்சீல்ட் தடுப்பூசி இவ்வளவு முக்கியத்துவமாக மாற காரணம் என்னவென்றால் கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் அதிகமான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். ரஷ்யா நாட்டின் தடுப்பூசி வந்து விட்டது, சீனாவின் தடுப்பூசி வர காத்துக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த தடுப்பூசி போட்டியில் நம்பகத்தன்மையோடு முன்னணியில் இருக்க கூடியது கோவிட்சீல்ட் என்று சொல்லக்கூடியது இந்த தடுப்பூசி. இதனை தயாரிக்க இருப்பது சீரம் நிறுவனம் எனவே தான் உலக நாடுகள் இந்த தடுப்பூசியையும், சீரம் நிறுவனத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
3 கட்ட பரிசோதனையில் நல்ல முன்னேற்றம்:
உலகின் பல நாடுகளில் தடுப்பூசி 3ஆம் கட்ட பரிசோதனையில் உள்ளது. சமீபத்தில் நடந்த சோதனையில் இந்த தடுப்பூசியால் நபருக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும், என்ன காரணத்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டதாக ஆராய்ந்துள்ளோம் என்றும் சொல்லி உள்ளார்கள். இதனால் தொடர்ந்து பரிசோதனை சென்று கொண்டு இருக்கின்றது. 3ஆம் கட்ட பரிசோதனை முடிந்து விட்டால் தடுப்பூசி தயாராகி விடும்.
உற்பத்தி:
கொரோனா தடுப்புசியை உற்பத்தி செய்து சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள். இந்த சூழலில் பல உலக நாடுகள் தங்களுடைய மகளைக் காப்பாற்றினால் தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி வந்துவிடும், மக்களுக்கு இலவசமாக கொடுப்போம் என்ற வாக்குறுதி கொடுக்கப்படுகின்றது.
இந்தியாவின் நிலை என்ன ?
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் போது இந்தியாவின் நிலை என்ன ? என்ற கேள்வி இருக்கிறது. இந்திய மக்கள் தொகை 2019 ஆம் ஆண்டு UN கணக்கெடுப்பின்படி 138 கோடியை தாண்டியுள்ளது என்று சொல்லப்படுகின்றது.
2021 தான் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட இருக்கின்றது . அப்போது பார்க்கும்போது 140 கோடியை தொட்டுவிடும் என்ற தகவலும் உள்ளது. இந்த ஒரு சூழலில் எல்லோருக்குமே தடுப்பூசி இலவசமாக கொடுத்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும், கட்டுப்படுத்த முடியும். இந்திய மக்கள் தொகையில் எல்லாருக்குமே தடுப்பூசியை இலவசமாக கொடுக்க முடியுமா ?என்ற கேள்வி எழுந்துள்ளது.
தடுப்பூசி விலை :
கொரோனாவுக்கு எதிராக வலுவாக போரிட்டு வெற்றி காண வேண்டும் என்றால் ஒருவரையும் தவற விடாமல் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.அப்படி செய்தால் தான் அனைவரும் மீண்டு பொருளாதாரத்தில் நாட்டை மீட்டெடுக்க முடியும். முதலில் ஒரு கொரோனா
தடுப்பூசிக்கு மூன்று டாலர் செலவாகும் என்றார்கள். அதாவது ரூபாய் 271 என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் ஓர் ஆண்டுக்குள் 140 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட்டாலும் கூட குறைந்த பட்சமாக 8டாலர் செலவாகிறது. அதாவது இந்திய ரூபாய்க்கு 571 ரூபாய். எனவே இந்தியாவில் இலவசமாக தடுப்பூசி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதே நேரம் ரூ.1000த்திற்கும் கீழ் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.