Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே! கல்லூரி கட்டணம் ரூ1 மட்டுமே….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டுவரும் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கான கல்லூரி கட்டணம் ரூபாய் 1 ஆக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பல குடும்பத்தினர் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில்  ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதால், பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தைப் பொருத்தவரையில், உயர்நீதிமன்றம் ஏற்கனவே கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து  40 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தற்போது இதற்கெல்லாம் பல படி மேலாக, பொருளாதாரம் முடங்கியதால் கல்வி  கட்டணம் செலுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதை  உணர்ந்து மேற்கு வங்க மாநிலம் நைஹதியிலுள்ள ரிஷி பங்கிம் சந்திர கல்லூரியில் கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் மொத்தம் 2400 இடங்கள் உள்ளதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |