Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காய்கறி லாரியில் மறைத்து… ரூ.1¼ கோடி ஹவாலா பணம் கடத்தல்… இருவரை மடக்கி பிடித்த போலீஸ்..!!

காய்கறி லாரியில் மறைத்து கொண்டு வந்தரூ.1 ¼ கோடி ஹவாலா பணம் பறிமுதல்

சந்தேகத்தின்பேரில் லாரியை நிறுத்தி அதிலிருந்த 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் பதட்டத்துடன் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறினர். இதையடுத்து லாரியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் காய்கறி மூட்டைக்கு கீழே அடியில் மறைத்து வைத்து முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ரூ.1 ¼ கோடி ஹவாலா பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் லாரியில் இருந்தவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர்கள் கேரள மாநிலம் ஆலுவாயை சேர்ந்த சலாம் (40) மற்றும் அவரது அண்ணன் மிதயன் குஞ்சு என்பதும், கோவையிலிருந்து பணத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து  பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அண்ணன்-தம்பி இருவரையும் கைது செய்தனர். மேலும் லாரியையும்  கைப்பற்றினர். பின்னர் 2 பேரையும் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Categories

Tech |