Categories
தேசிய செய்திகள்

ரூ.1 மருத்துவம், ரூ 10 உணவு, 80%இடஒதுக்கீடு…. அதிரடி காட்டும் மஹா. முதல்வர்

மஹாராஷ்டிராவில் புதிதாக பொறுப்பேற்ற அரசு அதிரடி திட்டமாக 3  திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவின் 18_ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். அவருடைய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.இந்த சூழ்நிலையில் சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து (மகா விகாஸ் அகதி ) என்ற கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். அந்த கூட்டணி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக செல்ல வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் என்று ஒன்றை மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து  உருவாக்கி இருக்கிறார்கள்.

அதனடிப்படையில் தற்போது மிக முக்கிய அறிவிப்புகளை அறிவித்திருக்கிறார்கள் முதல்வர் உத்தவ் தாக்கரே. மஹாராஷ்டிராவில் ஒரு ரூபாய்க்கு என்ற அற்புத திட்டம் அமுலாக்க இருக்கின்றது. மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து தாலுகாவிலும் உள்ள மருத்துவமனைகளிலும் ஒரு ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கப்படும் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இரண்டாவதாக பத்து ரூபாய்க்கு உணவு எனும் திட்டத்தை முதல்வர் அறிவித்திருக்கின்றார். ஒருவருக்கு தேவையான உணவை மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று இரண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக மகாராஷ்டிரா அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அதில் 80 சதவீத இட ஒதுக்கீடு உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பையும் உத்தவ் தாக்கரே அறிவிக்கிறார். முதல்வரின் இந்த முக்கிய அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |