பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெரியாருக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று எண்ணினார்கள், அண்ணா வந்தார், அண்ணாவிற்கு பிறகு இயக்கம் இருக்காது என்று கருதினார்கள், கலைஞர் வந்தார். கலைஞருக்கு பிறகு இயக்கம் இருக்காது என்று எண்ணினார்கள், தளபதி வந்தார். திமுகவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஒன்றும் செய்ய முடியாது. அதை உறுதிப்படுத்திக் காட்டி இருக்கிறார்.
ஆனாலும் முயற்சிக்கிறார்கள். இப்போதைக்கு அவர்களின் முயற்சி இரண்டாவது இடம், அதற்கடுத்து முதலிடம் என்று கணக்குப் போட்டுக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு போதும் நாம் இடம் தரக் கூடாது. சமூக நீதி மண்ணாக இருக்கின்ற தமிழ் மண்ணில் சனாதன கும்பலுக்கு இடமில்லை. நாம் எந்த ஹிந்துக்களுக்கு எதிராகவும் பேசவில்லை.
இந்து மக்களின் நம்பிக்கை என்பது வேறு, இந்து மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி அரசியல ஆதாயம் தேடுகின்ற சங்கபரிவார் கும்பல் வேறு, நாம் எதிர்ப்பது ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கபரிவர்களின் அரசியலைத்தான், நச்சு அரசியலை தான். அவர்கள் இந்து மக்களிடம் இருக்கின்ற கடவுள் நம்பிக்கையும், மத நம்பிக்கையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.