இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை உருவாக்கியவர் கெ.பி. ஹெட்கேவர். இவரது வாழ்க்கையை தற்போது படமாக இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் சஞ்சய் ராஜ் கௌரி நந்தன் இயக்குகிறார். அதன் பிறகு படத்தில் தேசிய விருது பெற்ற அனுப் ஜலோட்டா ஹீரோவாகவும், ஜஸ்வீர் சிங், ராகுல் ஜோஷி, எல். நிதீஷ் குமார், ஜெயானந்த் செட்டி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கே.பி ஹெட்கேவரின் வாழ்க்கை படம் ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 3 மொழிகளில் தயாராகிறது. இதனையடுத்து எங்களுடைய படம் ஹெட்கேவருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் பெருமை சேர்க்கும். மேலும் இன்று பிரபலமான சமூக அமைப்பாக இருக்கும் ஆர்எஸ்எஸ் மிகவும் கடுமையான பாதைகளை கடந்து வந்துள்ளது அதை வெளிப்படுத்தும் படமாகவும் எங்கள் படம் இருக்கும் என இயக்குனர் சஞ்சய் ராஜ் கூறியுள்ளார்.