Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: காவல்துறை சீராய்வு மனு …!!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த வாரம் நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும்,

பேரணி நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று மதியம் அல்லது நாளை காலையில் நீதிபதி இளந்திரையன் முன்பாக அரசு தரப்பில் அல்லது காவல்துறை தரப்பிலிருந்து முறையீடு செய்வதற்கு  வாய்ப்பு இருக்கின்றது. அவ்வாறு முறையீடு செய்யப்படும் பட்சத்தில்,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள ஆர்எஸ்எஸ் மனுடன், அரசு தரப்பில் தாக்கப்பட்டுள்ள சீராய்வு மனுவும் விசாரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த சீராய்வு  மனுவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று காரணத்தை காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவை தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |