ராமர் கோயிலின் அறக்கட்டளை கணக்கில் 6 லட்சம் உள்ள வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் அறக்கட்டளை கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாய் திருடு போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 2.5 லட்சம் மற்றும் 3.5 லட்சம் என இரண்டு காசோலைகள் நகல்கள் மூலம் ஆறு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் போலி கையெழுத்து போட்டு அயோத்தி கணக்கிலிருந்து அறங்காவலர்கள் அதைத் திருடியதாக டிஜிபி தீபக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த தொகை மகாராஷ்டிராவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டதாகவும், மூன்றாவது காசோலைகளில் 9.8 லட்சம் ரூபாய் திருட முயற்சித்த போது எஸ்பிஐ வங்கி கிளையில் ஊழல் அம்பலமானது. பெரிய தொகைக்கான காசோலை கையெழுத்திடப்பட்ட ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர் சம்பத்திடம் வங்கி மூத்த அதிகாரி தொடர்பு கொண்டு தகவல் கேட்ட போது அவ்வளவு தொகைக்கு கையெழுத்திடவில்லை என சம்பத்ராஜ் சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கி ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். இதன் பின்பு இந்த வழக்கு தொடர்புடைய பிரஷாந்த் மஹாவால் ஷெட்டி, சங்கர் சீத்தாராம் கோபாலே, சஞ்சய் தேஜ்ராஜ், விமல் லல்லா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கு முக்கிய காரணமாக செயல்பட்ட நபரை இன்னும் போலீசார் தேடி வருகின்றனர். அனைவருமே மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.