சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வரும் 9 ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. தற்போது கோவில் புஷ்கரணியில் புனரமைப்புப் பணி நடப்பதால் தெப்போற்சவம், புஷ்கரணியில் நடக்காமல் கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்க இருக்கிறது. இதில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
இந்த தெப்போற்சவத்தில் 9 ஆம் தேதி சீதா, லட்சுமணர், கோதண்டராமசாமி, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். மேற்கண்ட 3 நாட்கள் காலை 9 மணியில் இருந்து 10.30 மணி வரை ஸ்பாபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதன்பின் மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை வீதி உற்சவமும் நடக்கிறது. இதனையடுத்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத்தில் ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.