பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் மக்களுக்கு தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்கள், அலுவலகங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று திட்டமிடல் துறை அமைச்சரான ஆசாத் உமா் கூறியிருக்கிறார். மேலும், அவர் இது தொடர்பில், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத நபர்கள் வணிக வளாகங்களில் நுழைவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் பொது போக்குவரத்தையும் பயன்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனினும், மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.