யோகாசனம் செய்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை விதிமுறைகள்.
- அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரங்களில் உணவு உண்டபின் நான்கு மணி நேரம் கழித்தும் ஆசனங்கள் செய்யலாம். அதிகாலையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.
- யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே சில நிமிடங்கள் தியானம், பிராணயாமம் அதன் பிறகு ஆசனங்கள் செய்வது மிகவும் நல்லது.
- யோகாசனம், தியானம், மூச்சுப்பயிற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ அல்லது வடக்கு முகம் பார்த்தோ பயிற்சி செய்தல் நல்லது.
- நேரமில்லாமல் வருந்துபவர்கள் காலை நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு மாலை நேரத்தில் யோகாசன பயிற்சி செய்யலாம்.
- பருத்தித் துணியால் ஆன உடைகளை அணிவது நல்லது. ஆசனங்கள் செய்யும் பொழுது அழுத்தி வலிப்பதாக இருக்கக்கூடாது. அதுபோலவே உள்ளாடைகள் மிகவும் தளர்வாக இருக்கக் கூடாது.
- நீண்ட நேரம் வெயிலில் அலைந்தாலும், உடல் சோர்வாக இருந்தாலும், சரியான தூக்கம் இல்லாமல் இருக்கும் நேரங்களில் யோகாசன உடற்பயிற்சிகளை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இந்த நேரத்தில் யோகாசனப் பயிற்சி செய்தால் மேலும் உடல்களைப்பும், உடல் வெப்பமும் அதிகரிக்கும்.
- யோகாசனம் செய்த பின்பு கட்டாயம் சகவாசனம் என்ற ஓய்வு ஆசனத்தில் குறைந்தது 10 நிமிடங்களாவது இருக்க வேண்டும். அப்பொழுது தான் உடலின் ரத்த ஓட்டம் சரியான நிலையில் இருக்கும்.
- யோகப் பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால் தான் குளிக்க வேண்டும்.
- யோகாசன பயிற்சிக்குப் பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்களையோ, பழச்சாறு அல்லது உணவு உட்கொள்ளலாம்.
- யோகாசன பயிற்சிகள் செய்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அவசியம் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்களுக்குள் தலை குளித்தல் நல்லது.