Categories
உலக செய்திகள்

சவுதியில் இனி இந்த தண்டனை கிடையாது… உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சவூதியில் இனி பிரம்படி தண்டனை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சவுதி அரேபியா உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தின் அமைப்பிலிருந்து பிரம்படி தண்டனையை நீக்குவதற்கான உத்தரவை செயல்படுத்தியுள்ளது. சவுதியில் உயர்நிதிமன்றத்தின் பொது ஆணையம் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சிறை, அபராதம் அல்லது இரண்டின் கலவையாக  மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரம்படி தண்டனையை நீக்குவது என்பது நீதித்துறையை நவீனமயமாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஷரியா இஸ்லாமிய சட்டத்தில் பிரம்பினால் அடிப்பது தாஜிர் வகையின் கீழ் வருகின்றது. அதாவது ஷரியாவின் இரண்டு முக்கிய ஆதாரங்களாக கருதப்படும் குரான் அல்லது ஹதீஸில் தண்டனை எழுதப்படாத குற்றங்களுக்கு நீதித்துறை அல்லது தலைமையின் விருப்பப்படி தண்டனைகள் கொடுக்கப்படும் என்பதாகும்.

Categories

Tech |