ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.08) நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஹதராபாத் சன் ரைசஸ் அணி, கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் – பர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினார்.
அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 160 ரன் இருந்த போது போது அரை சதம் அடித்த டேவிட் வார்னர் 52ரன்னில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்ஸ்டோவ்97 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 அடித்துள்ளது.