Categories
பல்சுவை

“RuPay Festive Carnival”…. Uber ரைடில் 50 % தள்ளுபடி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

RuPay-ன் கிரெடிட் (அல்லது) டெபிட்கார்டைப் பயன்படுத்தும் நபராக இருப்பின் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. அதாவது, இந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக “RuPay Festive Carnival” ஐ கொண்டுவந்துள்ளது. இதன்கீழ் கேப் ரைடில் 50% என்ற பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூபே கார்டு வாயிலாக காப்சவாரிகளுக்கு பணம் செலுத்திவிட்டால், 50சதவீத தள்ளுபடியானது கிடைக்கும். RuPay தன் அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் டுவிட்டர் கணக்கில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. இதனுடைய சிறப்பு என்னவெனில், இச்சலுகையைப் பெறுவதற்கு நீங்கள் கிரெடிட்கார்டு மற்றும் டெபிட்கார்டு இரண்டையும் பயன்படுத்தலாம்.

RuPay-ன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், நீங்கள் கிரெடிட்கார்டு வாயிலாக கேப் சவாரிக்கு பணம் செலுத்தினால், உங்களுக்கு 50 % (அதிகபட்சம் ரூ. 100) தள்ளுபடி கிடைக்கும். இது தவிர்த்து டெபிட் கார்டு வாயிலாக பணம் செலுத்தினால், கேப் பயணங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி (அதிகபட்சம் ரூ. 50) கிடைக்கும். ஒரு கார்டு வாயிலாக அதிகபட்சம் 2 முறை சலுகையைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களிடம் ரூபே கிரெடிட், டெபிட்கார்டுகள் இருந்தால், இச்சலுகையை 4முறை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் மூலமாக கேப் ரைடுகளில் ரூபாய்.300 வரை (கிரெடிட் கார்டில் 2 முறை ரூ.100, மற்றும் டெபிட் கார்டில் ரூ.50 2 முறை) சேமிக்கலாம். இருந்தாலும் இங்கு கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், இந்த ரூபேசலுகையின் பலன் உபரில் ( Uber) கேப் சவாரிக்கு முன் பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும். RuPay கார்டின் இச்சலுகை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதை மனதில்கொள்ள வேண்டும். செப்டம்பர் 30க்கு பின், இச்சலுகையைப் பயன்படுத்த முடியாது. RuPay கிரெடிட்கார்டு வாயிலாக உபர் கேப்சவாரிக்கு பணம் செலுத்தினால், RUPAYCRED9 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். டெபிட் கார்ட் வாயிலாக ஊபர் வண்டிச் சவாரிக்கு பணம் செலுத்தினால், RUPAYDEB9 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.

Categories

Tech |