Categories
தேசிய செய்திகள்

ரூ. 1,100 கோடி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்..!!

தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டு மூலம் 1,100 கோடி ரூபாய் பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சீனாவில் இருந்து செயல்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடுபவர்கள் கோடிக்கணக்கில் பணம் இழப்பதால்  தற்கொலை செய்து கொள்வதாக ஹைதராபாத் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையொட்டி  சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்திய தெலங்கானா காவல்துறை, சீனாவை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்குகளில் 30 கோடி ரூபாய் இருந்ததை கண்டறிந்து முடக்கியுள்ளனர். டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் ஆன்லைன் விளையாடுவதற்கு இளைஞர்களை கவருவதற்காக தனி குழுவை அமைத்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் நிர்வாகிகள் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியன் ரம்மி தீன்பாதி அந்தர்பதி போன்ற விளையாட்டுகள் மூலம், இதுவரை 1,100 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 3 மடிக்கணினி மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Categories

Tech |