Categories
சினிமா

“ரூ.‌ 6.88 லட்சம் சுங்கவரி”…. ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட நடிகர் ஷாருக்….. என்ன நடந்தது…..? அதிகாரிகள் திடீர் விளக்கம்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சார்ஜா சென்று விட்டு மும்பைக்கு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் இருந்த சுங்க இலாக்கா அதிகாரிகள் ஷாருக்கானை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு தற்போது சங்க இலக்க அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, நடிகர் ஷாருக்கான் அவருடைய மேலாளர் பூஜா டட்லானி உட்பட 3 பேர் விமான நிலையம் வந்திருந்தனர்.

அப்போது அவருடைய பாதுகாவலர் ரவிசங்கரின் பையில் 3 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் 5 கைக்கடிகாரங்களின் மேலுறைகள் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 17.86 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கு அவர்கள் சுங்கவரி செலுத்தவில்லை. இது தொடர்பாக நடிகர் ஷாருக் கானிடம் தெரிவிக்கப்பட்ட போது அவரும் சுங்கவரி செலுத்துமாறு கூறவே அவருடைய பாதுகாவலரும் சுங்கவரி செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர்கள் ரூ.‌6.88 லட்ச ரூபாய் சுங்க வரி செலுத்திய பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும் இதன் காரணமாக நடிகர் ஷாருக்கான் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |