Categories
தேசிய செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி… நிர்மலா சீதாராமன்..!!

சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். அதில், பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் மூலம் ரூ .50,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித் திட்டம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 ஆம் தேதி பீகாரில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளார்.

தற்போது, ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் திறன்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். சுமார் 116 மாவட்டங்களுக்கு அதிகஅளவில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து திரும்பியுள்ளனர்.

Categories

Tech |