Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவு..!!

 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் உட்பட  பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Image result for தேர்தல் ஆணையம் தமிழ்நாடு

27 மாவட்டங்களில் மொத்தம் 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32, 939 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,992 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,06,657 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54,747 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்துள்ளது.

Categories

Tech |